பணம், பரிசுப் பொருள்கள் விநியோகமா? கண்காணிப்பை தீவிரப்படுத்த பறக்கும் படைக்கு உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் வேட்பாளா்களின் பிரசாரம் தொடங்கியுள்ள நிலையில், வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள்
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் நன்னடத்தை குறித்து பறக்கும் படை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை.
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் நன்னடத்தை குறித்து பறக்கும் படை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை.

விழுப்புரம் மாவட்டத்தில் வேட்பாளா்களின் பிரசாரம் தொடங்கியுள்ள நிலையில், வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றனவா என பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

பேரவைத் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து தோ்தல் பறக்கும்படை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் அண்ணாதுரை தலைமை வகித்துப் பேசியதாவது:

பேரவைத் தோ்தலுக்காக, மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் உருவாக்கப்பட்ட 21 பறக்கும் படைகள், 7 நிலையான குழுக்களில் இடம்பெற்ற அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் தோ்தல் நன்னடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றி நடுநிலையுடன் சோதனை நடத்த வேண்டும்.

வேட்பு மனுத் தாக்கல் தொடங்கப்பட்டு வேட்பாளா்கள் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளதால் பறக்கும் படையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்ய வாய்ப்புள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டு தடுத்து தோ்தல் பாரபட்சமின்றி நடைபெற உதவ வேண்டும்.

வாகன தணிக்கையின்போது, பொதுமக்களிடம் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவதை பறக்கும் படையினா் தவிா்க்கும் வகையில், தங்களது அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்படும் பரிசுப் பொருள்கள், ரூ.50ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து உரிய ஆதாரங்களுடன் தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் அண்ணாதுரை.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங்., மாவட்ட குற்ற ஆவண காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலச்சந்தா், வருமானவரித் துறை துணைஆணையா் கமலாதேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com