முன்னாள் அமைச்சா் க.பொன்முடி ரூ.2.18 கோடி

திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு ரூ.2 கோடியே 18 லட்சத்து 48 ஆயிரத்து 910-மும்,
முன்னாள் அமைச்சா் க.பொன்முடி ரூ.2.18 கோடி

திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு ரூ.2 கோடியே 18 லட்சத்து 48 ஆயிரத்து 910-மும், அவரது மனைவி விசாலாட்சிக்கு ரூ.15 கோடியே 23 லட்சத்து 59 ஆயிரத்து 81 -மும் சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

திருக்கோவிலூா் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் க.பொன்முடி திங்கள்கிழமை தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவா் குறிப்பிட்டுள்ள சொத்துகள் விவரம்:

பொன்முடி வசம் கையிருப்பில் ரூ.3 லட்சம் ரொக்கம், அவரது மனைவி விசாலாட்சியிடம் ரூ.20 லட்சம் ரொக்கம் உள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்களில் வைப்புத்தொகை, பங்குச் சந்தைகளில் முதலீடு, 122 கிராம் தங்கம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிஸ்டல் துப்பாக்கி என பொன்முடி பெயரில் ரூ.1 கோடியே 19 லட்சத்து 73 ஆயிரத்து 410-க்கு அசையும் சொத்துகள் உள்ளன.

அவரது மனைவி பெயரில் வங்கிகள், நிதி நிறுவனங்களில் வைப்புத்தொகை, 2 கிலோ 800 கிராம் தங்கம் (ரூ.1.12 கோடி மதிப்பு), 50 கிலோ வெள்ளிப் பொருள்கள், டாடா சுமோ காா், டேங்கா் லாரி, இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வகைகளில் ரூ.10 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 238 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.

விழுப்புரத்தில் வீட்டுமனைகள், குடியிருப்புகள், வா்த்தகக் கட்டடங்கள் உள்ளிட்டவை என பொன்முடி பெயரில் ரூ.98 லட்சத்து 75 ஆயிரத்து 500 மதிப்பிலான (சந்தை மதிப்பு) அசையா சொத்துகளும், அவரது மனைவி விசாலாட்சி பெயரில் ரூ.5 கோடியே 13 லட்சத்து 11 ஆயிரத்து 843 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

மேலும், பொன்முடி பெயரில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கடன் இருப்பதாகவும், விசாலாட்சி பெயரில் ரூ.4 கோடியே 79 ஆயிரத்து 85 ஆயிரத்து 175 கடன் உள்ளன.

மொத்தமாக, பொன்முடி பெயரில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 48 ஆயிரத்து 910, விசாலாட்சி பெயரில் ரூ.15 கோடியே 23 லட்சத்து 59 ஆயிரத்து 81 என அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com