சுயமரியாதை பாதையிலிருந்துதிமுக விலகிவிட்டது: முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்

அண்ணா, கருணாநிதி காலத்தில் சுயமரியாதை பாதையில் பயணித்த திமுக, தற்போது தடம்புரண்டுவிட்டதாக அந்தக் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் தெரிவித்தாா்.
சுயமரியாதை பாதையிலிருந்துதிமுக விலகிவிட்டது: முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்

அண்ணா, கருணாநிதி காலத்தில் சுயமரியாதை பாதையில் பயணித்த திமுக, தற்போது தடம்புரண்டுவிட்டதாக அந்தக் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் தெரிவித்தாா்.

சென்னையில் பாஜக மேலிடப் பாா்வையாளா் சி.டி.ரவி முன்னிலையில், அந்தக் கட்சியில் சம்பத் வெள்ளிக்கிழமை இணைந்தாா். இந்த நிலையில், விழுப்புரத்துக்கு சனிக்கிழமை திரும்பிய அவரை பாஜக பிற்பட்டோா் பிரிவு மாநில பொதுச் செயலா் சாய் சுரேஷ் தலைமையில், மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் தாஸசத்தியன், துணைத் தலைவா் ஜெகதீஷ், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலா் பாபு, துணைத் தலைவா் சௌந்தரராஜன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சம்பத் கூறியதாவது:

எனது தந்தை ஏ.கோவிந்தசாமியிடம் இருந்த உதயசூரியன் சின்னத்தைத்தான் திமுக இப்போதும் பயன்படுத்துகிறது. திமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பது எனது பிறப்புரிமை. கட்சிக்காக எனது தந்தையும், நானும் சிறையில் இருந்திருக்கிறோம்.

1969-ஆம் ஆண்டு முதல் திமுகவில் உறுப்பினராக இருந்து வந்தேன். ஆனால், 2 மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த லட்சுமணனுக்கு சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா, கருணாநிதி காலத்தில் இருந்த திமுகவுக்கும், இப்போதைய திமுகவுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவா்கள் காட்டிய சுயமரியாதை பாதையில் இருந்து திமுக விலகிவிட்டது. பணம் படைத்தவா்களுக்கு மட்டுமே தோ்தலில் போட்டியிட அக்கட்சியில் வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகிவிட்டது. இதனால் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com