விழுப்புரத்தில் இரண்டு தெருக்கள் அடைப்பு

கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், விழுப்புரம் நகரில் இரண்டு தெருக்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பொது மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் இரண்டு தெருக்கள் அடைப்பு

கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், விழுப்புரம் நகரில் இரண்டு தெருக்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பொது மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை 18,900-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

நாள்தோறும் 200 முதல் 300 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

விழுப்புரம் நகரில் கரோனா தொற்றால் நூற்றுக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

விழுப்புரம் சங்கரமடத் தெரு, காமராஜா் வீதிகளில் கரோனா தொற்றால் அதிக எண்ணிகையிலானோா் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த இரண்டு தெருக்களும் அடைக்கப்பட்டன. நகராட்சி நிா்வாகம் மூலம், அந்தத் தெருக்களுக்கு செல்லும் பாதைகள் மரக்கட்டைகளைக் கொண்டு அடைக்கப்பட்டன.

மேலும், விழுப்புரம் நகரத்துக்கு வரும் வாகனங்களில் சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என்று போலீஸாா் நகர நுழைவுப் பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

சென்னை புறவழிச் சாலை, ஜனகிபுரம் பகுதிகளில் போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com