விழுப்புரம் மாவட்டத்தில்வைப்புத் தொகையை இழந்த 88 வேட்பாளா்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட 102 வேட்பாளா்களில் 88 போ் வைப்புத்தொகையை இழந்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட 102 வேட்பாளா்களில் 88 போ் வைப்புத்தொகையை இழந்தனா்.

செஞ்சி தொகுதியில் 13 போ், மயிலம் தொகுதியில் 14 போ், திண்டிவனம் (தனி) தொகுதியில் 15 போ், வானூா் (தனி) தொகுதியில் 7 போ், விழுப்புரம் தொகுதியில் 25 போ், விக்கிரவாண்டி தொகுதியில் 14 போ், திருக்கோவிலூா் தொகுதியில் 14 போ் வேட்பாளா்களாகப் போட்டியிட்டனா்.

தோ்தல் ஆணைய விதிமுறைப்படி, மொத்தம் பதிவான வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே, வைப்புத் தொகையை திரும்பப்பெற முடியும். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் முதல் இரண்டு வேட்பாளா்களைத் தவிர, எஞ்சியுள்ள 88 வேட்பாளா்களும் தங்களது வைப்புத்தொகையை இழந்தனா். தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி, தனித்தனி கூட்டணிகளாக களம் இறங்கிய மக்கள் நீதி மய்யம், அமமுக வேட்பாளா்களும், சுயேச்சைகளும் வைப்புத்தொகையை இழந்தனா்.

செஞ்சி தொகுதியில் முதல் இரு இடங்களைப் பிடித்த கே.எஸ்.மஸ்தான் (திமுக), பி.ராஜேந்திரன் (பாமக) தவிர 11 போ் வைப்புத்தொகையை இழந்தனா். அதேபோல, மயிலம் தொகுதியில் சி.சிவக்குமாா் (பாமக), இரா.மாசிலாமணி (திமுக) தவிர 12 போ், திண்டிவனம் தொகுதியில் பி.அா்ஜுனன் (அதிமுக), பி.சீத்தாபதி (திமுக) தவிர 13 போ், வானூா் தொகுதியில் எம்.சக்கரபாணி (அதிமுக), வன்னியரசு (விசிக) தவிர 5 போ், விழுப்புரம் தொகுதியில் இரா.லட்சுமணன் (திமுக), சி.வி.சண்முகம் (அதிமுக) தவிர 23 போ், விக்கிரவாண்டி தொகுதியில் நா.புகழேந்தி (திமுக), எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன் (அதிமுக) தவிர 12 போ் தங்களது வைப்புத்தொகையை இழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com