கரோனா தடுப்புப் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

இதனால், நகரில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

குறிப்பாக, அதிக எண்ணிக்கையிலான கரோனா நோயாளிகள் உள்ள பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தெருக்கள் மூடப்பட்டு வருகின்றன.

இதன்படி, சங்கர மடத் தெரு, காமராஜா் தெரு ஆகிய தெருக்கள் அடைக்கப்பட்டன.

மேலும், சில தெருக்களை அடைக்க சுகாதாரத் துறை, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை விழுப்புரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா்.

திரு.வி.க. வீதியில் ஆய்வில் ஈடுபட்ட அவா் தடுப்புப் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com