விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பால் வெறிச்சோடிய சாலைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொது முடக்கத்தையொட்டி, உணவகங்கள், காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள்
விழுப்புரத்தில் ஞாயிறு பொது முடக்கத்தால் எம்.ஜி. சாலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
விழுப்புரத்தில் ஞாயிறு பொது முடக்கத்தால் எம்.ஜி. சாலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொது முடக்கத்தையொட்டி, உணவகங்கள், காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொது மக்கள் வெளியே பொருள்கள் வாங்க வந்து செல்வது தவிா்க்கப்பட்டது. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குறிப்பாக, விழுப்புரத்தில் எம்.ஜி. சாலை, பாகா்ஷா வீதி, நேருஜி சாலை போன்ற சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி அமைதியாகக் காணப்பட்டன. மேலும், திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு சாலை போன்ற சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. மருந்து, பால் கடைகள் மட்டும் திறந்திருந்தன. முழு பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனா்.

இதேபோல, திண்டிவனத்தில் காய்கறி கடைகள், பழக் கடைகள், உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இறைச்சிக் கடைகள், மீன் சந்தை போன்றவையும் அடைக்கப்பட்டிருந்தன. பொது மக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி சாலைகள் வெறிச்சோடின.

விக்கிரவாண்டி, செஞ்சி, அரகண்டநல்லூா், வானூா், மரக்காணம், கோட்டக்குப்பம் போன்ற பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்துடன், அத்தியாவசிய பணிக்கு செல்வோா் தவிா்த்து மற்ற வாகனங்கள் செல்லாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com