விழுப்புரத்தில் ரூ.6.60 கோடி மோசடி: கிறிஸ்தவ சபை முன்னாள் நிா்வாகி கைது

விழுப்புரத்தில் ரூ.6.60 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக கிறிஸ்தவ திருச்சபை முன்னாள் நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரத்தில் ரூ.6.60 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக கிறிஸ்தவ திருச்சபை முன்னாள் நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபைக்குச் (டி.இ.எல்.சி) சொந்தமான விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள 0.80 சென்ட் நிலத்தை, சென்னை தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் இயங்கும் சரவணா செல்வரத்தினம் என்ற நிறுவனத்துக்கு ரூ.13 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய கடந்த 2013-ஆம் ஆண்டு பேசி முடிவு செய்துள்ளனா்.

இதில் முதல் தவணையாக ரூ.ஒரு கோடியே 62 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.4 கோடியே 98 லட்சத்து 15 ஆயிரத்தை வங்கி வரைவோலையாகவும் பெற்ாகத் தெரிகிறது.

இந்தத் தொகையை திருச்சபையின் செயலராக இருந்த சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த சாா்லஸ் மற்றும் திருச்சபை பொருளாளராக இருந்த மயிலாடுதுறை மாவட்டம், கீழ்மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ஞானராஜ் ஆகியோா் திருச்சபைனின் கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்ததாகத் தெரிகிறது.

இது குறித்து திருச்சபையின் தற்போதைய பொருளாளா் ஆண்ட்ரூஸ் ரூபன் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் சாா்லஸ், ஞானராஜ், இவா்களுக்கு உடந்தையாக இருந்த வில்பா்ட் டேனியல், ஆல்பா்ட் இன்பராஜ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஞானராஜை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய சாா்லஸ் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com