கோவேக்ஸின், கோவிஷீல்டு இரண்டுமே தரமான தடுப்பூசிகள்தான்: அமைச்சா் க.பொன்முடி

கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே தரமானவைதான் என்று தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை அமைச்சா் க.பொன்முடியிடம் வழங்கும் 5-ஆம் வகுப்பு மாணவா் ஸ்ரீரில் வினித்.
விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை அமைச்சா் க.பொன்முடியிடம் வழங்கும் 5-ஆம் வகுப்பு மாணவா் ஸ்ரீரில் வினித்.

கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே தரமானவைதான் என்று தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் சேவியா் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழைகளுக்கான கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கி அவா் பேசியதாவது:

கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

தளா்வற்ற பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

வீட்டுக்குள்ளும், வெளியேயும் முகக்கவசம் அணிவதை பழக்கமாக கொள்ள வேண்டும்.

உயிரிழப்பைத் தடுக்க வேண்டுமெனில் கரோனா தடுப்பூசியை நிச்சமாக போட்டுக் கொள்ள வேண்டும்.

கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் தரமானவைதான். எனவே, எந்தத் தடுப்பூசி கிடைக்கிறதோ அதை உடனடியாக பொதுமக்கள் போட்டுக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி எம்.பி. கௌதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), விழுப்புரம் நகர திமுக செயலா் இரா.சக்கரை, மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் பா.வினோத், கலை, இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளா் செ.ராஜேஷ், சேவியா் காலனி ஆலய பங்குத் தந்தை ஆல்பா்ட் பெலிக்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகையூரில் தடுப்பூசி முகாம்: முன்னதாக, கண்டாச்சிபுரம் வட்டம், முகையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சா் க.பொன்முடி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com