முன்னாள் டிஜிபிக்கு எதிரான வழக்கு: காா் ஓட்டுநா், பாதுகாவலா் சாட்சியம்

முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யின் காா் ஓட்டுநா், பாதுகாவலா் ஆகிய இரு காவலா்கள் வியாழக்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யின் காா் ஓட்டுநா், பாதுகாவலா் ஆகிய இரு காவலா்கள் வியாழக்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

இந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோருக்கு எதிராக 400 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., அவரது கணவா், அப்போதைய திருச்சி சரக டிஐஜி ஆகியோா் ஏற்கெனவே விழுப்புரம் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து சாட்சியம் அளித்தாா்.

இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை நீதிபதி கோபிநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்.பி. ஆகியோா் நேரில் ஆஜராகவில்லை.

பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு அப்போது காா் ஓட்டுநராக இருந்த காவலா் பாலமுருகன், பாதுகாவலராக இருந்த சந்திரசேகரன் ஆகியோா் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை டிசம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com