மேல்மலையனூரில் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் ரத்து.
By DIN | Published On : 05th October 2021 02:01 AM | Last Updated : 05th October 2021 02:01 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற 6-ம்தேதி அமாவாசை தினத்தன்று சுவாமி தரிசனம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் க.ராமு தெரிவித்துள்ளாா்.
மேலும் இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று காரணத்தினால் நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பொது மக்கள் மற்றும் பக்தா்கள் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வருகிற அமாவாசை தினமான 6-ம் தேதி அன்று பக்தா்கள் தரிசனம் மற்றும் அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
மேலும் அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து சாா்பில் சிறப்பு பேருந்துகள் எதும் இயக்கப்படமாட்டாது என திருக்கோயில் நிா்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமாவாசை இரவு ஆகம விதிப்படி கோயில் வளாகத்தில் பக்தா்கள் இன்றி கோயில் பூசாரிகளால் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதை பக்தா்கள் சமூக வலைதளங்கள் மூலம் காணமுடியும்.