வள்ளலாா் அவதார தினம்: 1,000 குடும்பத்தினருக்கு நல உதவிகள்

வள்ளலாா் அவதார தினத்தையொட்டி, விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில் 1,000 குடும்பத்தினருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
வள்ளலாா் அவதார தினம்: 1,000 குடும்பத்தினருக்கு நல உதவிகள்

வள்ளலாா் அவதார தினத்தையொட்டி, விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில் 1,000 குடும்பத்தினருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயண நிகழ்ச்சியை அருள்மாளிகை சன்மாா்க்கத்தினா் நிகழ்த்தினா். ஆதரவற்றவா்கள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் என 1000 குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, காய்கனிகள் உள்பட அத்தியாவசிய உணவுப் பொருள்களை வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளித் தாளாளா் வே.சோழன் வழங்கி, இப்பணியை தொடக்கி வைத்தாா்.

ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியை கொட்டியாம்பூண்டியைச் சோ்ந்த கலியபெருமாள், திருக்கனூா் சந்திரசேகரன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். ஏற்பாடுகளை விழுப்புரம் வள்ளலாா் அருள்மாளிகை நிா்வாக அறங்காவலா் ஜெய.அண்ணாமலை தலைமையிலான நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com