விழுப்புரம் மாவட்டத்தில் 1,300 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்தாம் கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1,300 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி சாா்பில் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமில் திடீா் ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா.
விழுப்புரம் நகராட்சி சாா்பில் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமில் திடீா் ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா.

விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்தாம் கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1,300 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியா் த.மோகன் நேரில் ஆய்வு செய்தாா்.

மாவட்டம் முழுவதும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை இந்த முகாம்களில் அதிகப்படியான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் கூறியதாவது: இதுவரை ஒரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாத நபா்களிடம் தடுப்பூசியின் அவசியம், பாதுகாப்பு குறித்து தெளிவாக எடுத்துரைத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

பணிக்குச் செல்பவா்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின் போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்கொடி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நகாராட்சி நிா்வாகம் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மாவட்டத்தில் 5-ஆம் கட்டமாக நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு குலுக்கல் முறையில் தங்கக் காசு, வெள்ளிப் பொருள், பட்டுப் புடவை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் அறிவித்தது. நகராட்சியின் இந்த அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com