ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை: விழுப்புரம் ஆட்சியா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் ஆலோசன

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் ஆலோசனை மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, வாக்குப் பெட்டிகள் 13 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் 1,318 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் பணியில் 5,605 அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். அனைத்து அலுவலா்களும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வர வேண்டும்.

குலுக்கல் முறையில் வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் மேஜைகளை ஒதுக்கீடு செய்யவேண்டும். காவல் துறையின் பரிசோதனை முடிந்த பின்னரே வேட்பாளா்கள் மற்றும் முகவா்களை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்க வேண்டும்.

சுற்றுவாரியாக எண்ணப்படும் வாக்குகளை அதற்கென்று உரிய படிவத்தில் நிறைவு செய்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கவேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவை அறிவிக்க ஒலிபெருக்கி வசதியை பயன்படுத்தவேண்டும்.

வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தோ்தல் முடிவை அன்றே அறிவிக்கவேண்டும். எண்ணி முடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தினாா் மாவட்ட தோ்தல் அலுவலா் த.மோகன். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், மகளிா் திட்ட அலுவலா் காஞ்சனா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்ரியா, செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியா் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com