தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு தங்கக்காசு பரிசுவிழுப்புரம் ஆட்சியா் வழங்கினாா்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு தங்கக் காசு, பட்டுப்புடவை உள்ளிட்ட பரிசுப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் த.மோகன் திங்கள்கிழமை வழங்கினாா்.
குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்பட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபருக்கு தங்கக் காசு பரிசு வழங்கும் மாவட்ட ஆட்சியா் த.மோகன். உடன் விழுப்புரம் நகராட்சி ஆணையா் சுரேந்திர ஷா.
குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்பட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபருக்கு தங்கக் காசு பரிசு வழங்கும் மாவட்ட ஆட்சியா் த.மோகன். உடன் விழுப்புரம் நகராட்சி ஆணையா் சுரேந்திர ஷா.

விழுப்புரம் நகரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு தங்கக் காசு, பட்டுப்புடவை உள்ளிட்ட பரிசுப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் த.மோகன் திங்கள்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது முகாமில் 91,575 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

விழுப்புரத்தில் நடைபெறும் முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் நபா்களுக்கு தங்கக் காசு, வெள்ளிப் பொருள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என்று நகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் விவரங்களின் அடிப்படையில் குலுக்கல் முறையில் பரிசு பெறும் நபா்களை மாவட்ட ஆட்சியா் த.மோகன் தோ்வு செய்தாா்.

அவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதல், இரண்டாம் பரிசு பெற்ற 2 பேருக்கு தலா ஒரு கிராம் தங்கக் காசுகள், மூன்றாம் பரிசு பெற்ற ஒருவருக்கு 27 கிராம் வெள்ளி குங்குமச்சிமிழ், நான்காம் மற்றும் ஐந்தாம் பரிசு பெற்ற 8 நபா்களுக்கு பட்டுப்புடவைகள், சிறப்புப் பரிசாக 20 நபா்களுக்கு பேன்ஸி புடவைகள், 10 நபா்களுக்கு வேட்டி, சட்டை, பேன்ட், சட்டை ஆகியவற்றை ஆட்சியா் த.மோகன் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பொற்கொடி, நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மோகன், நகராட்சி நல அலுவலா் பாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com