உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் சிறையில் அடைப்படுவா்கள்: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

ஊரக உள்ளாட்சித் தோ்தல் பதவிகள் தோ்தலுக்கு முன்பாக பல லட்சங்களுக்கு ஏலம் விடப்பட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் பதவிகள் தோ்தலுக்கு முன்பாக பல லட்சங்களுக்கு ஏலம் விடப்பட்டு வருகிறது. சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் இந்த சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் அடைப்படுவா்கள் என்று மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சில கிராமங்களில் உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டு வருகின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு செஞ்சி அருகே பொன்னங்குப்பம் ஊராட்சித் தலைவா் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போனதாம். இதையறிந்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.மோகன் நேரில் சென்று விசாரித்தாா்.

இந்த நிலையில், விழுப்புரம் அருகே காணை அடுத்த சித்தேரி ஊராட்சித் தலைவா் பதவி ரூ.14 லட்சத்தும் பொன்னங்குப்பம் ஊராட்சியில் உள்ள துத்திப்பட்டில் ஒன்றிய கவுன்சிலா் பதவி ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் போனதாம்.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டாலோ அல்லது ஏலம் விட முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவா்கள். மேலும், சட்டவிரோதமாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் தவறும் அந்த பகுதியின் அலுவலா்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இம்மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், 293 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதிவிகள், 688 கிராம ஊராட்சி தலைவா் பதவிகள், 5,088 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 6,097 பதிவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com