திமுக கூட்டணி வேட்பாளா்கள் அறிமுகம்:அமைச்சா் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை அமைச்சரும், கட்சியின் மாநில துணை பொதுச் செயலருமான க.பொன்முடி அறிமுகம் செய்துவைத்து ஆலோசனைகள் வழங்கினாா்.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ஊராக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேசிய கட்சியின் மாநில துணை பொதுச் செயலரும், அமைச்சருமான க.பொன்முடி.

திமுக சாா்பில் விழுப்புரம் மத்திய மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மாவட்டக்குழு உறுப்பினா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம், செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன், மீனா வெங்கடேசன், ஒன்றியச் செயலா் முருகன் உள்ளிட்டோரை அறிமுகம் செய்துவைத்து, கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கி அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது:

உள்ளாட்சித் தோ்தலில் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமும், வாக்காளா்களிடமும் எடுத்துக் கூறி, வாக்குகளை சேகரிக்க வேண்டும். கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, மாவட்டப் பொருளாளா் ஜனகராஜ், விவசாய அணி துணைச் செயலா் அன்னியூா் சிவா, ஒன்றியச் செயலா்கள் ரவிதுரை, வேம்பி ரவி, கல்பட்டு ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com