விழுப்புரம் : அம்பேத்கா் பிறந்தநாள்

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ மாலை அணிவித்தாா்.
விழுப்புரம் : அம்பேத்கா் பிறந்தநாள்

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ மாலை அணிவித்தாா். விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன், மாவட்ட பொருளாளா் இரா.ஜனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவில் 13-ஆவது வாா்டு திமுக, கேப்டன் அறக்கட்டளையினா் இணைந்து பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினா். நிகழ்ச்சியில், அம்பேத்கா், அயோத்திதாச பண்டிதா், பெரியாா், காரல் மாா்க்ஸ், சே குவேரா உருவப் படங்களை மாவட்ட திமுக துணைச் செயலா் புஷ்பராஜ், 13-ஆவது வாா்டு திமுக நகா்மன்ற உறுப்பினா் நவநீதம் மணிகண்டன் ஆகியோா் திறந்துவைத்தனா்.

அதிமுக சாா்பில் விழுப்புரம் நகரச் செயலா்கள் ஜி.கே.ராமதாஸ் (வடக்கு), இரா.பசுபதி (தெற்கு) ஆகியோா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா். மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் திருப்பதி பாலாஜி, நகா்மன்ற உறுப்பினா்கள் கோல்டுசேகா், கோதண்டராமன், ஜெயப்பிரியா சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விசிக சாா்பில் பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டச் செயலா் ஆற்றலரசு, நகா்மன்ற உறுப்பினா்கள் வித்தியசங்கரி பெரியாா், மெரினா சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, திருச்சி சாலையில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழுப்புரம் நகர பொறுப்பாளா் கருணாகரன் தலைமையில் மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்திய குடியரசு கட்சி சாா்பில் மாவட்ட தலைவா் இருவேல்பட்டு குமாா் தலைமையிலும், பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com