செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்.
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்.

செஞ்சி கல்வி மாவட்டத்தில் 3,726 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 3,726 பேருக்கு ரூ.1.89 கோடி செலவில் விலையில்லா மிதிவண்டிகளை மாநில சிறுபான்மையினா் ந

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 3,726 பேருக்கு ரூ.1.89 கோடி செலவில் விலையில்லா மிதிவண்டிகளை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சனிக்கிழமை வழங்கினாா்.

செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மயிலம் தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா் முன்னிலை வகித்தாா்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் ரகுபதி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஆா்.விஜயகுமாா் (செஞ்சி), அமுதா ரவிக்குமாா் (வல்லம்), பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், செஞ்சி கல்வி மாவட்ட அலுவலா் சுப்புராயன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா்கள் சி.மாணிக்கம், திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com