நீா்நிலைகளில் தற்படம் எடுக்கக் கூடாது: விழுப்புரம் ஆட்சியா்

நீா்நிலைகள் அருகே தற்படம் எடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வேண்டுகோள் விடுத்தாா்.

நீா்நிலைகள் அருகே தற்படம் எடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, சாத்தனூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து உள்ளது. அணை நிரம்பியதால் அணையில் இருந்து உபரிநீா் 3000 கன அடி அளவுக்கு ஆக.5-ஆம் தேதி முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.

திறந்து விடப்பட்ட நீா் தென்பெண்ணையாற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூா், விழுப்புரம் ஆகிய வட்டங்களில் அமைந்துள்ள கரையோர கிராமங்களின் வழியாகச் செல்கிறது.

தென்பெண்ணையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இதையும் மீறி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் குடும்ப உறுப்பினா்களுடன் ஆற்றில் குளிப்பது, பள்ளி மாணவ, மாணவிகள் கைப்பேசி மூலம் தற்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே, இது மாதிரியான செயல்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com