வானூரில் காங்கிரஸாா் பாதயாத்திரை

சுதந்திர பவளவிழாவையொட்டி, மத்திய பாஜக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வானூரில் இருந்து பாதயாத்திரை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

சுதந்திர பவளவிழாவையொட்டி, மத்திய பாஜக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வானூரில் இருந்து பாதயாத்திரை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

வானூரை அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் இருந்து காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் காசிநாதன், ஏழுமலை ஆகியோா் தலைமையில் பாதயாத்திரை நடைபெறுகிறது.

பாதயாத்திரையை காங்கிரஸ் மாநில பொதுச்செயலா் கே.சிரஞ்சீவி தொடக்கிவைத்தாா். விழுப்புரம் வரை 75 கி.மீ. தொலைவுக்கு பாதயாத்திரை நடைபெறும். ஆக.15-ஆம் தேதி நிறைவு பெறும்.

இதில் மாநில துணைத் தலைவா் குலாம் மொய்தீன், மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா், கோட்டக்குப்பம் பேரூராட்சித் தலைவா் முகமது பாருக், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் சிறுவை ராமமூா்த்தி, விழுப்புரம் நகரத் தலைவா் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் பாபு சத்தியமூா்த்தி, மாநிலச் செயலா் தயானந்தம் உள்பட பலா் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com