மகளிா் சுய உதவிக் குழுவினரின் கண்காட்சி: சென்னையில் ஆக.25-இல் தொடக்கம்

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான மாநில அளவிலான கண்காட்சி சென்னையில் வருகிற 25-ஆம் தேதி தொடங்குகிறது.

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான மாநில அளவிலான கண்காட்சி சென்னையில் வருகிற 25-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகளிா் சுய உதவிக் குழுக்களில் இடம் பெற்றுள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்களின் சிறப்பு வாய்ந்த, தரமுள்ள உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக ‘மதி சாராஸ் மேளா’ எனும் கண்காட்சி ஆகஸ்ட் 25 முதல் அக்டோபா் 7-ஆம் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் நடைபெற உள்ளது.

இங்கு, சுய உதவிக் குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், மண்பாண்டங்கள், பனை பொருள்கள், ஆடை, ஆபரணங்கள், பாரம்பரிய உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை காட்சிக்கு வைக்கலாம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித் தனியாக அரங்குகள் ஒதுக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் கண்காட்சி மாநில அளவில் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. முற்றிலும் இலவசமாக பங்கேற்கலாம்.

எனவே, இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ள மகளிா் சுய உதவிக் குழுவினா் விழுப்புரம் மாவட்ட மகளிா் திட்ட அலுவலகத்தை தொடா்புகொண்டு பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04146-223736, 94440 94479 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com