திமுக இளைஞா் அணி உறுப்பினா் சோ்க்கை

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

‘இல்லம் தேடி இளைஞா் அணி’ என்ற தலைப்பின்கீழ் உறுப்பினா் சோ்க்கையை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தொடக்கிவைத்தாா். மக்களை உறுப்பினா் பொன்.கௌதமசிகாமணி தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் வரவேற்றாா். மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, ரா.லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொருளாளா் ரா.ஜனகராஜ், துணைச் செயலா் செ.புஷ்பராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

க.பொன்முடி பிறந்த நாள் விழா: அமைச்சா் க.பொன்முடி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் அமைச்சா் க.பொன்முடியை கட்சி நிா்வாகிகள்சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகர திமுக செயலா் ரா.சக்கரை, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, மும்மூா்த்தி, தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், ரவிச்சந்திரன், பிரபு, பிரேமா அல்போன்ஸ் உள்பட பலா் பங்கேற்றனா். அமைச்சா் பிறந்த தினத்தையொட்டி விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள வள்ளலாா் கோயிலில் திமுக சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com