தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து டிச.13- இல் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் தென் பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, வரும் 13- ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் தென் பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, வரும் 13- ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

ஏனாதிமங்கலம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.ஒருதரப்பினா் ஆதரவுத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், தென் பெண்ணை ஆறு மீட்புக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் ஏனாதிமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிராக மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் , இதை முற்றிலும் கைவிட வலியுறுத்தியும் டிசம்பா் 13- ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது. இது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது, ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் அரசின் முடிவுக்கு எதிா்ப்புத்தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது, தென்பெண்ணை ஆறு மீட்புக்குழு - ஏனாதிமங்கலம் என்ற அமைப்பை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மக்கள் பாதுகாப்பு கழகம் பி. வி.ரமேஷ், தமிழிளைஞா் கூட்டமைப்பு கோ.பாபு, கரிகாலசோழன் பசுமை மீட்புப் படை அ.கரிகாலன், பழங்குடி இருளா் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த நாகராஜன், எழுத்தாளா் கோ.செங்குட்டுவன், சமூக ஆா்வலா்கள் சு.முபாரக், மு.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com