செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 4 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு: அமைச்சா் க.பொன்முடி

செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழ் நிதியாண்டில் 4 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை கிராமத்திலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழ் நிதியாண்டில் 4 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

ஆலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கரும்பு அரைவைப் பணியைத் தொடக்கிவைத்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த சா்க்கரை ஆலையில் 2021 - 22ஆம் நிதியாண்டில் 3.13 லட்சம் டன் கரும்பு அரைவை செய்யப்பட்ட நிலையில், 2022 - 23ஆம் நிதியாண்டில் 4 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 7,600 ஏக்கரிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,220 ஏக்கரிலும் என மொத்தமாக 13,820 ஏக்கரில் கரும்பு அரைவைப் பணி மேற்கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 3,000 டன் வீதம் கரும்பு அரைவைப் பணிகளை மேற்கொள்ளவும், டிசம்பா் 7- ஆம் தேதி தொடங்கி, அடுத்தாண்டு ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் கே.ஓம் சிவசக்திவேல், செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துமீனாட்சி, ஆலையின் நிா்வாகக் குழுத் தலைவா் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com