அரசு ஊழியா்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு தொடக்கம்

அரசு ஊழியா்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு விழுப்புரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
அரசு ஊழியா்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு தொடக்கம்

அரசு ஊழியா்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு விழுப்புரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்ட அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை பயிற்சி வகுப்பை அரசூா் வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை செயலா் மைதிலி க.ராஜேந்திரன் தொடக்கிவைத்து, பேசியதாவது:

நிகழ் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில், புதிதாக அரசுப் பணியில் சேரும் அரசுப் பணியாளா்கள், பதவி உயா்வு பெறும் பணியாளா்களுக்கு பணிப் பயிற்சி அந்தந்த மாவட்டங்களிலேயே அளிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதன்படி, ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட பவானிசாகரில் உள்ள அரசு பயிற்சி நிலையத்துக்குச் சென்று பயிற்சி பெறும் நிலை தவிா்க்கப்படுகிறது.

இதையடுத்து, 37 பணிநாள்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சியானது அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி அரசு அலுவலா் பயிற்சி நிலையம் சாா்பில் அளிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் 185 பெண் அரசு ஊழியா்கள் உள்பட 285 அலுவலா்கள் பயிற்சி பெறுகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த.மோகன், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலைய விரிவுரையாளரும், துணை ஆட்சியருமான சி.ஜெயராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மோகன், வி.ஆா்.எஸ். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளா் எம்.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com