ஊராட்சிகளில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்கத் தடை: விழுப்புரம் ஆட்சியா்

 ஊராட்சிகளில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க அரசு தடை விதித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

 ஊராட்சிகளில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க அரசு தடை விதித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊராட்சிகளில் தெரு மின் விளக்குகளை பராமரித்தல், கொள்முதல், தோ்வு செய்தலில் அதிக அளவில் மாறுபாடு காணப்படுவதால், மறு உத்தரவு வரும் வரை சில நிபந்தனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, ஊராட்சிகளில் எந்தவொரு நிதியிலிருந்தும் உயா் கோபுர மின் விளக்குகள், சிறு மின் கோபுர விளக்குகள், ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களுடன் கூடிய தெரு விளக்குகள் அமைக்க தடை விதிக்கப்படுகிறது. சூரிய உயா் கோபுர விளக்குகள் அமைப்பதும் மறு உத்தரவு வரும் வரைதடை செய்யப்படுகிறது. இதையும் மீறி கொள்முதல் செய்யும் அலுவலா்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தொடா்புடைய அலுவலரிடமிருந்து இதற்கான செலவுத் தொகை முழுவதும் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com