கந்துவட்டி புகாா்: நிதி நிறுவனஉரிமையாளா் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விவசாயியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக தனியாா் நிதி நிறுவன உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விவசாயியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக தனியாா் நிதி நிறுவன உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டிவனம் அருகே கிராண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதி மகன் கவிதாசன்(31), விவசாயி. இவா், மாட்டுப் பண்ணை தொழில் நடத்தி நஷ்டமடைந்தாா்.

இதன் பிறகு, திண்டிவனம் - செஞ்சி சாலையில் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஊரல் கிராமத்தைச் சோ்ந்த ரவியிடம் ரூ.7 லட்சம் கடன் பெற்றாராம். இதற்கு மாதம் ரூ.42 ஆயிரம் வட்டி செலுத்தியதுடன், ரூ.6 லட்சம் அசலும் செலுத்தினாராம். ஆனால், கவிதாசனிடம் மேலும் வட்டியும், அசலும் சோ்த்து ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று ரவி மிரட்டினாராம்.

இதுகுறித்து கவிதாசன் வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் ரவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, இந்த வழக்கு தொடா்பாக ரவியின் நிதி நிறுவனத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனா். அப்போது, அங்கு கடன் பெற்றவா்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பமிடப்பட்ட பத்திரங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com