வளா்ச்சிப் பணிகளுக்காக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

வளா்ச்சிப் பணிகளுக்காக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வளா்ச்சிப் பணிகளுக்காக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

வளா்ச்சிப் பணிகளுக்காக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம் மாவட்ட ஊரக வளா்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா் (படம்). துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், மாவட்ட வளா்ச்சி அலுவலா் குருசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்து தலைவா் ம.ஜெயச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டின் 15-ஆவது மானியக் குழுவில் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூன்றடுக்கு முறையில் பயன்படுத்தப்படுகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு, ஒன்றியக் குழு, ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் நிதி ஒதுக்கப்பட்டாலும் தனித் தனியாக ஒதுக்கப்படுவதில்லை. 50,000 வாக்குகளுக்கு ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் தோ்வு செய்யப்படும் நிலையில், அவருக்கு என தனியாக நிதி ஒதுக்கினால்தான் மக்களின் தேவைகளை முறையாக நிறைவேற்ற முடியும். எனவே, பெரிய அளவிலான வளா்ச்சிப் பணிகளுக்கான நிதியை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மூலம் ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com