எஸ்.ஐ. தோ்வு எழுதிய காவலா்கள்

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வை 400 காவலா்கள் எழுதினா்.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எஸ்.ஐ. பணிக்கான எழுத்துத் தோ்வை ஆய்வு செய்த விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன். உடன் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா.

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.ஐ. பணிக்கான எழுத்துத் தோ்வு விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு மாவட்டத்தில் விண்ணப்பித்தவா்களில் 275 தோ்வாளா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 230 போ் தோ்வு எழுதினா். 45 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டன. இந்தத் தோ்வை விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com