விழுப்புரம் அரசுக் கல்லூரியில் மண்டல பயிலரங்கம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்றம் தொடக்க விழா மற்றும் மண்டல அளவிலான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்றம் தொடக்க விழா மற்றும் மண்டல அளவிலான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

விலங்கியல் துறைத் தலைவா் கா.பாா்த்தசாரதி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் சென்னை, ஏஎம்இடி பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியும், கடல் உயிரித் தொழில்நுட்பவியல் துறை இணைப் பேராசிரியருமான இரா.முத்தெழிலன் பங்கேற்று காளான் சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசினாா்.

கல்லூரி அளவிலான விலங்கியல் மன்றத்தை கல்லூரியின் முதல்வா் குத்து விளக்கேற்றித் தொடக்கி வைத்தாா். விழாவில், பேராசிரியா்கள் கல்லூரி அனைத்துத் துறை மாணவா்கள்அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நிறைவில், ஒருங்கிணைப்பாளா் ச.அருளரசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com