நலிந்த பெண் நாட்டுப்புறக் கலைஞா்கள் ஓய்வூதியம் பெற விதிமுறைகளைத் தளா்த்த வலியுறுத்தல்

நலிந்த பெண் நாட்டுப்புறக் கலைஞா்கள் ஓய்வூதியம் பெற விதிமுறைகளைத் தளா்த்த வேண்டும் என்று தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.

நலிந்த பெண் நாட்டுப்புறக் கலைஞா்கள் ஓய்வூதியம் பெற விதிமுறைகளைத் தளா்த்த வேண்டும் என்று தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.

விழுப்புரத்தில் அண்மையில் இந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சத்தியராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்வம், செயலா் பாலு, சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், 2023 ஜனவரி மாதத்தில் விழுப்புரத்தில் மாநில மாநாட்டை நடத்துவது, இதில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பது, நலிந்த நிலையிலுள்ள பெண் நாட்டுப்புறக் கலைஞா்கள் ஓய்வூதியம் பெற உள்ள விதிமுறைகளைத் தளா்த்த அரசை வலியுறுத்துவது, தகுதியானவா்களுக்கு மட்டுமே கலைமாமணி விருதை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில ஆலோசகா் பழனி, மாநில பொதுச் செயலா் ஜெயராஜ், இணை பொதுச் செயலா் நாகூா் கனி, மாநில கெளரவத் தலைவா் வானதி கதிா், மாநிலப் பொருளாளா் அசோக்குமாா் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com