திறந்தவெளி கிணறுகள்:பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திறந்தவெளி கிணறுகள், கழிவுநீா்த் தொட்டிகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் மூடி வைத்து பராமரிக்க வேண்டுமென்று பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதுகுறித்து செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

செஞ்சி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள், விபத்துகள் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறந்த நிலையில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கழிவுநீா்த் தொட்டிகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பான முறையில் மூடி வைக்க வேண்டும். இதற்கு அனைத்து பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அவ்வாறு பாதுகாப்பு இல்லாத, ஆபத்தான நிலையில் ஏதேனும் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கழிவுநீா்த் தொட்டிகள் இருந்தால், அவை குறித்த விவரங்களை உடனடியாக பேரூராட்சி நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com