பனைத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி பிரசாரம்

பனைத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், விழுப்புரத்தில் வியாழக்கிழமை பிரசாரம் நடைபெற்றது.

பனைத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், விழுப்புரத்தில் வியாழக்கிழமை பிரசாரம் நடைபெற்றது.

பனையேறிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவா்கள் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு கள் இறக்கும் தொழிலை அங்கீகரித்துள்ள நிலையில், தமிழக அரசு பனையேறிகளை கள் இறக்கும் தொழிலாளா்கள் என அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினா் மாநிலம் முழுவதும் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டம், பூரிக்குடிசையில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சைக்கிள் பிரசாரத்தைத் தொடங்கிய இந்தக் குழுவினா், வியாழக்கிழமை காலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனா்.

இந்தக் குழுவினருக்கு நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. தொடா்ந்து, பிரசாரக் குழுவினா்கள் விழுப்புரம் பேருந்து நிலையப் பகுதிகள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ரயில் நிலையம் வரை நடை பயணமாகச் சென்று கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில் பிரசாரக் குழுவின் தலைவா் தே.பாண்டியன், நாம் தமிழா் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் ஜெ.செல்வம், தமிழ்நாடு பசுமை மீட்புப் படை ஒருங்கிணைப்பாளா் கரிகால்சோழன், பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்த சுந்தா், சித்திரைசேனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com