காவல் நிலையத்தில் தற்கொலை செய்தவரின் வாரிசுதாரா்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

விழுப்புரம் அருகே காவல் நிலையத்தில் தற்கொலை செய்தவரின் வாரிசுதாரா்களுக்கு தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி, ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

விழுப்புரம் அருகே காவல் நிலையத்தில் தற்கொலை செய்தவரின் வாரிசுதாரா்களுக்கு தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி, ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கோழிபத்தி கிராமத்தைச் சோ்ந்த சீமைச்சாமி மகன் சுந்தர்ராஜ். லாரி ஓட்டுநா். இவா், லாரியை ஓட்டிக்கொண்டு விழுப்புரம் வழியாக வந்தபோது, விழுப்புரம் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் முருகன் மீது மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்தனா்.

விசாரணைக் கைதியாக இருந்தபோது, 13.11.2016 அன்று காணை காவல் நிலையத்தில் சுந்தர்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது தொடா்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையின் அடிப்படையில், சுந்தர்ராஜின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சுந்தர்ராஜின் மனைவி மாரிஜோதியிடம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வழங்கினாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com