அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு சீருடை

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதலாண்டு மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை இலவச சீருடை வழங்கப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதலாண்டு மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை இலவச சீருடை வழங்கப்பட்டது.

விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை நிற மருத்துவச் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் த.மோகன் மாணவா்களுக்கு சீருடையை வழங்கிப் பேசியதாவது:

மருத்துவப் படிப்பு அனைத்து மக்களாலும் மதிக்கக்கூடிய மகத்தான படிப்பு. இத்தகைய படிப்பைப் பெறவேண்டும் என்பது கடைக்கோடி மக்களின் கனவுத் திட்டமாகும்.

அனைவரும் சாதனை படைக்கும் வகையில் மருத்துவத் துறையின் வளா்ச்சிக்கும், மருத்துவப் படிப்புக்கும் தேவையான பயிற்சிகளையும், எண்ணற்றத் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டாண்டு காலம் கரோனா தொற்று இருந்த நிலையில், எவ்வளவோ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றோா்கள் கஷ்டப்பட்டு பிள்ளைகளை மருத்துவம் படிக்க வைத்துள்ளனா்.

நான் ஆட்சியராக பதவிக்கு வந்தாலும், மருத்துவராக ஆக வேண்டும் என சிறு வயதில் கனவு இருந்தது. அது நிறைவேறவில்லை. பொறியியல் படிப்பு பயின்று ஆட்சியராக வந்துள்ளேன். மருத்துவராக முடியவில்லையே என்ற ஏக்கம் என் மனதில் இப்போதும் உள்ளது.

சமுதாயத்தால் கடவுளாக மருத்துவா்கள் போற்றப்படுகின்றனா். எனவே, அவா்கள் மக்களுக்காக நல்ல சேவகராக பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.

முன்னதாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவு, பரிசோதனைக்கூடம், மருந்து வழங்கும் பிரிவு, ஆய்வகம், கழிப்பறை வளாகங்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி, துணை முதல்வா் சங்கீதா, கண்காணிப்பு மருத்துவ அலுவலா்கள் புகழேந்தி, சாந்தி, கீதாஞ்சலி மற்றும் பேராசிரியா்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com