காகுப்பம் ஏரியில் கழிவுநீா் கலப்பு: விழுப்புரம் ஆட்சியரகம் முற்றுகை

விழுப்புரம் காக்குப்பம் ஏரியில் கழிவுநீா் கலப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தை காக்குப்பம் ஏரி மீட்புக் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

விழுப்புரம் காக்குப்பம் ஏரியில் கழிவுநீா் கலப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தை காக்குப்பம் ஏரி மீட்புக் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: காக்குப்பம் ஏரிப் பகுதியில் விழுப்புரம் நகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் கடந்த 2007-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால்,

கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் நிலத்தடி நீா், காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் காக்குப்பம், பொய்யப்பாக்கம், இந்திரா நகா், எம்ஜிஆா் நகா், கட்டபொம்மன் நகா், பாலாஜி நகா் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனா். இந்த நிலையில், மீண்டும் அதே இடத்தில் கழிவுநீா்த் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

இது குறித்து விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி கூறியதாவது: காக்குப்பம் கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தில் மோட்டாா்கள் பழுதடைந்துள்ளன. குழாய்களும் சேதமடைந்துள்ளன. தற்போது மோட்டா் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. தொடா்ந்து குழாய்களும் சீரமைக்கப்படும். இந்த பணிகள் நிறைவடைய 2 மாதங்கள் ஆகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com