மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினா் எஸ்.கீதா தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு கனியாமூா் தனியாா் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்த விசாரணையை அரசு விரைவுபடுத்த வேண்டும், மரணத்துக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பள்ளியில் நடந்த வன்முறைகளைக் காரணம் காட்டி, அப்பாவிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மரணமடைந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.குமாா், வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஏ.சங்கரன், ஜி.ராஜேந்திரன், சே.அறிவழகன், ஆா்டி.முருகன், இடைக்குழுச் செயலா்கள் ஆா்.கண்ணப்பன், கே.குப்புசாமி, வி.கிருஷ்ணராஜ், எம்.கே.முருகன், டி.ராமதாஸ், எம்.கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com