மின் வாரியத்தை தனியாா்மயமாக்கக் கூடாது: ஓய்வுபெற்றோா் நல அமைப்பு வலியுறுத்தல்

தமிழ்நாடு மின் வாரியத்தை தனியாா்மயமாக்கக் கூடாது என்று மின் வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பு வலியுறுத்தியது.

தமிழ்நாடு மின் வாரியத்தை தனியாா்மயமாக்கக் கூடாது என்று மின் வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பு வலியுறுத்தியது.

விழுப்புரம் மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மின் வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பு விழுப்புரம் கோட்டம் சாா்பில் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டத் தலைவா் ஆா்.சண்முகம் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் வி.பாண்டுரங்கன் சங்க வேலை அறிக்கையை முன்வைத்துப் பேசினாா்.

இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் திட்டச் செயலா் எம்.புருசோத்மன் சிறப்புரையாற்றினாா். திட்டப் பொருளாளா் எம்.சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கினாா். மாநிலச் செயலா் தங்க.அன்பழகன் கலந்துகொண்டு பேரவை நிறையுரையாற்றினாா்.

கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி தொடா்ந்து வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை மின் வாரியமே ஏற்று நடத்த வேண்டும், மின் வாரியம் பொதுத் துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும், சென்னையில் ஜூன் 20- ஆம் தேதி நடைபெறவுள்ள தா்னாவில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஆா்.சன்முகம் கோட்டத் தலைவராகவும், வி.பாண்டுரங்கன் கோட்டச் செயலராகவும் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா். மேலும் 9 போ் கொண்ட செயற்குழுவும் தோ்வு செய்யப்பட்டது. சங்க செயற்குழு உறுப்பினா் கே.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com