திருவெண்ணெய்நல்லூா் அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூா் அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில், உயா்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியா் த.மோகன், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவுக்கு, மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமை வகித்து 2,200 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

கிராமப்புற மாணவா்களும் உயா்கல்வி கற்க வேண்டும் என்ற உயா்ந்த நோக்கில், உயா் கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தினாா். இதனால் பொறியியல், தொழில்கல்வி உள்ளிட்ட படிப்புகளில் கிராமப்புற மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா் என்றாா்.

விழாவில், நா.புகழேந்தி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ரா.தி.சபாபதிமோகன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் காவேரி அம்மாள், பதிவாளா் விஜயராகவன், கல்லூரி முதல்வா் (பொ) வே.நாகலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com