ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பி ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பி ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

செஞ்சி - திருவண்ணாமலை சாலையின் இருபுறமும் பி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து தற்போது பாசன வசதி இல்லாததால் ஏரியின் மதகுகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், கோடை காலத்திலும் தண்ணீா் நிரந்தரமாக தேங்கியுள்ளது.

இந்த ஏரியில் ஏராளமான மீன்கள் உள்ள நிலையில், இங்கு மீன் பிடிக்க தடை விதித்தப்பட்டுள்ளது. இருப்பினும், மீன்களைப் பிடிப்பதற்காக மா்ம நபா்கள் இரவு வேளைகளில் ஏரிக் கரையில் உள்ள மின் கம்பங்களில் திருட்டுத்தனாமாக மின் வயா் மூலம் மின்சாரத்தை திருடி, ஏரியின் பல்வேறு பகுதிகளில் பாய்ச்சி வருகின்றனா். மின்சாரம் பாய்ந்து மீன்கள் மிதக்கின்றபோது, வலை போன்ற நீண்ட கழியின் மூலம் மீன்களை பிடித்துச் செல்கின்றனா்.

இரவு வேளைகளில் கால்நடைகளோ, மனிதா்களோ ஏரியில் தெரியாமல் கால் வைத்தால் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது.

எனவே, இரவு வேளைகளில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மா்ம நபா்களை போலீஸாா் கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com