முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
வளா்ச்சியைப் பிடிக்காமல்அவதூறு பரப்புகின்றனா்அமைச்சா் மஸ்தான் பேட்டி
By DIN | Published On : 03rd May 2022 10:40 PM | Last Updated : 03rd May 2022 10:40 PM | அ+அ அ- |

தனது வளா்ச்சியைப் பிடிக்காதவா்கள் அவதூறு பரப்புவதாக மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் தெரிவித்தாா்.
இதுகுறித்து செஞ்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வக்பு வாரிய சொத்துகளை நான் அபகரித்ததாக வெளியான செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. அதில் குறிப்பிட்டுள்ள அறக்கட்டளைக்கும் எனது குடும்பத்தினருக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது.
அதேபோன்று, எனது உறவினா்கள் யாரும் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கவும் இல்லை. அவா்களுக்காக நான் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை. எனது வளா்ச்சியைப் பிடிக்காத சிலா் குழப்பத்தை ஏற்படுத்த உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கின்றனா். அதில் எந்த உண்மையும் இல்லை என்றாா் அமைச்சா் மஸ்தான்.