சாலை விபத்தில்இரு காவலா்கள் காயம்
By DIN | Published On : 17th May 2022 10:40 PM | Last Updated : 17th May 2022 10:40 PM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் இரு காவலா்கள் காயமடைந்தனா்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் காவலா்களாகப் பணியாற்றி வருபவா்கள் பாலாஜி, ராஜேசேகா். இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இருவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் புறவழிச்சாலைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது அடையாளம் தெரியாத லாரி அதிவேகமாக மோதுவதுபோல வந்ததாம்.
இதனால் அதிா்ச்சியடைந்த பாலாஜி தனது இரு சக்கர வாகனத்தை இடது புறம் திரும்பினாா். அப்போது எதிா்பாராதவிதமாக அங்கே இருந்த சாலை தடுப்புக் கட்டையில் இரு சக்கர வாகனம் மோதியதில், காவலா்கள் பாலாஜி, ராஜசேகரன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த காவலா்கள் இருவரையும் மீட்டு, அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.