செஞ்சி பி.ஏரி மேம்பாட்டுப் பணி:அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணிகளையும் அடிக்கல் நாட்டி தமிழக சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.93 கோடியில் பி ஏரியை மேம்படுத்தும் பணிகளையும், ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணிகளையும் அடிக்கல் நாட்டி தமிழக சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து, செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் கிராமத்தில் அரங்கநாத பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தா்கள் பயன்பாட்டுக்காகவும், கிராம மக்கள் பயன்பாட்டுக்காகவும் ரூ.51.47 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை அமைச்சா் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் திண்டிவனம் சாா் - ஆட்சியா் அமீத், மாவட்டத் திட்ட இயக்குநா் சங்கா், செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் மஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், வட்டாட்சியா் நெகருன்னிசா, பொதுக்குழு உறுப்பினா் செல்வராஜ், ஊராட்சித் தலைவா் பராசக்தி, திமுக ஒன்றியச் செயலா்கள் நெடுஞ்செழியன், பச்சையப்பன், அண்ணாதுரை, விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜலட்சுமிசெயல்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com