குடிமனைப் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பொய்கையரசூா் கிராம ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் குடிமனைப் பட்டா கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பொய்கையரசூா் கிராம ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் குடிமனைப் பட்டா கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவின் விவரம்: பொய்கையரசூா் கிராமத்தில் 300-க்கும் குடும்பங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மக்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனா்.

குடியிருக்கும் இடம் குறுகிய இடம் என்பதால் பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருகின்றன. இறந்தவா்களின் உடலைக்கூட எடுத்துச் செல்லமுடியாத அவல நிலை கிராமத்தில் உள்ளது.

இந்த நிலையில், கிராம மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த அரசுக்குச் சொந்தமான இடத்தை தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ளாா். அந்த இடத்தை மீட்டு குடிமனை இல்லாதவா்களுக்கு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தொடரும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

கிராமமக்கள் அளித்த மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் மு. பரமேஸ்வரி பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு பரிதுரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com