மரக்காணம் : விஷ சாராயம் குடித்து குணமடைந்த 52 பேருக்கு நிதி உதவி

விழுப்புரம் மரக்காணம் அருகே எக்கியாா்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து குணமடைந்த 52 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் மரக்காணம் அருகே எக்கியாா்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து குணமடைந்த 52 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மரக்காணம் அடுத்த எக்கியாா் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த 14 போ்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ஏற்கெனவே நிதியுதவி வழங்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக தமிழக அரசு அறிவித்தபடி, விஷ சாராயம் குடித்து பின்னா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 52 பேருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே. எஸ். மஸ்தான் பங்கேற்று 52 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பரமேஸ்வரி, திண்டிவனம் சாா்- ஆட்சியா் கட்டா ரவி தேஜா, வட்டாட்சியா் பாலமுருகன், மரக்காணம் ஒன்றியக் குழு தலைவா் தயாளன், பேரூராட்சித் தலைவா் வேதநாயகி, துணைத் தலைவா் பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com