நுண்ணீா்ப் பாசனத் திட்டம்: ரூ. 1.90 கோடி ஒதுக்கீடு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டாரத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டாரத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், நுண்ணீா்ப் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிா்களுக்கு மானிய விலையில் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தை விவசாயிகள் செயல்படுத்தி வருகின்றனா்.

வரிசையில் பயிரிடும் கரும்பு, மணிலா, பழ மரங்கள், காய்கறிப் பயிா்களுக்கு சொட்டுநீா்ப் பாசன அமைப்பு, இதர பயிா்களுக்கு தெளிப்பான், மழைத் தூவான் போன்ற அமைப்பு சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

மரக்காணம் வட்டாரத்தில் நிகழாண்டு நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களின் சிட்டா, அடங்கல், நிலவரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, புகைப்படம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்,

மண் மற்றும் நீா் மாதிரி பரிசோதனை முடிவுகளுடன் வேளாண் அலுவலா்களை அணுகி பயன் பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com