விழுப்புரம் மாவட்டத்தில் 23,473 மெட்ரிக் டன் உரங்கள் கையிருப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சாகுபடிக்கு 23,473 மெட்ரிக் டன் உரங்கள் கை யிருப்பில் உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சாகுபடிக்கு 23,473 மெட்ரிக் டன் உரங்கள் கை யிருப்பில் உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கணேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் மே மாதம் வரை 6,415 ஏக்கரில் நெல், 145 ஏக்கரில் சிறுதானியங்கள், 70 ஏக்கரில் பயறு வகைகள், 572 ஏக்கரில் எண்ணெய் வித்துகள், 325 ஏக்கரில் கரும்பு என பயிரிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நடப்புப் பருவத்துக்குத் தேவையான 7,244 மெட்ரிக் டன் யூரியா, 3,230 மெட்ரிக் டன் டிஏபி, 289 மெட்ரிக் டன் பொட்டாஷ், 11,583 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 1,127 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் என மொத்தம் 23,473 மெட்ரிக் டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் கையிருப்பில் உள்ளன.

விவசாயிகள் தங்களுக்குத் தே வையான உரங்களை வாங்கச் செல்லும்போது தவறாமல் தங்களின் ஆதாா் எண்ணைக் கொண்டு,

விற்பனை முனையக் கருவி மூலம் உரிய ரசீதுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com