மேல்மலையனூா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.58 லட்சம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள் மிகு அங்காள பரமேசுவரி அம்மன் திருக்கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.58.75 லட்சம் கிடைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள் மிகு அங்காள பரமேசுவரி அம்மன் திருக்கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.58.75 லட்சம் கிடைத்துள்ளது.

இந்தக் கோயிலின் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் மேல்மலையனூா் ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையா் சிவலிங்கம், ஆய்வாளா் சங்கீதா அறங்காவ லா் குழுத் தலைவா் சந்தானம் பூசாரி ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், ரூ. 58 லட்சத்து 75 ஆயிரத்து 351 ரூபாய் ரொக்கமும், 270 கிராம் தங்க நகைகளும், 485 கிராம் வெள்ளிப் பொருள்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

இந்தப் பணியின்போது அறங்காவலா்கள் செந்தில்குமாா், தேவராஜ் , ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com