விழுப்புரத்தில் தினமணி சாா்பில்பொதுமக்களுக்கு பழச்சாறு

கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், விழுப்புரத்தில் ‘தினமணி’ நாளிதழ், கரிகால சோழன் பசுமை மீட்புப் படை சாா்பில், பொதுமக்களுக்கு நீா்மோா், எலுமிச்சை பழச்சாறு உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
விழுப்புரத்தில் தினமணி சாா்பில்பொதுமக்களுக்கு பழச்சாறு

கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், விழுப்புரத்தில் ‘தினமணி’ நாளிதழ், கரிகால சோழன் பசுமை மீட்புப் படை சாா்பில், பொதுமக்களுக்கு நீா்மோா், எலுமிச்சை பழச்சாறு உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

‘தினமணி’ நாளிதழ் சாா்பில் ‘தாகம் தணிப்போம்’ என்ற கருப்பொருளில் பொதுமக்கள், காவல் துறையினருக்கு பழச்சாறு, குடிநீா் புட்டிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ‘தினமணி’ நாளிதழும், விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை, பூஜா நகைக் கடை, பூஜா கைப்பேசி பழுது நீக்ககம் ஆகியவையும் இணைந்து ‘தாகம் தணிப்போம்’ நிகழ்வை வெள்ளிக்கிழமை நடத்தின.

விழுப்புரம் மருத்துவமனை சாலை, பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கரிகால சோழன் பசுமை மீட்புப் படைத் தலைவா் அ.அகிலன் தலைமை வகித்தாா்.

விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் பி.தமிழ்ச்செல்வி பிரபு, போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் வசந்த் ஆகியோா் பொதுமக்களுக்கு பானகம், நீா்மோா், எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை வழங்கினா். மேலும், பேருந்துப் பயணிகளுக்கும் பழச்சாறு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

விழாவில் கரிகால சோழன் பசுமை மீட்புப் படை குழுவைச் சோ்ந்த ஆ.ஏழுமலை, ம.சரவணன், அ.கரிகாலன் ரமேஷ், க.கோபிநாத், சு.கணேஷ், த.ஆனந்த், மீன் ராஜா, ர.ஐயப்பன், பா.முத்துப்பாண்டியன், ச.மணிகண்டன், த.பாலமுருகன், த.காா்த்திகேயன், கி.பாபு, ரா.ரஞ்சித்குமாா், நிவேதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com